164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு எடுத்துச் செல்ல முயற்சித்த போது இந்த இருவரையும் விமான நிலைய அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
சிலாபம் மற்றும் கொழும்பைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குவைத் டினார் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் இந்த இருவரிடமிருந்தும் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love