விளையாட்டு துறையில் மிக உயர்வாக கருதப்படும் லாரஸ் விருதை சுவிட்சலாந்தின் ரொஜர் பெடரர் வென்றுள்ளார். அத்துடன் இந்த ஆண்டில் மீண்டு வந்த வீரர் என்ற விருதும் பெடரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்காக ரபேல் நடால், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரிடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 36 வயதான பெடரர் தட்டிச் சென்றுள்ளார்.
20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள பெடரர் கடந்த ஆண்டில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மற்றும் விம்பிள்டனில் சம்பியன் பட்டங்களை பெற்றிருந்தார்.
மேலும் இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் மீண்டும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றிருந்தமையினால் அவருககு; கடந்த ஆண்டுக்கான மீண்டு வந்த வீரர் என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை லாரஸ் விருதை கைப்பற்றியதன் மூலம் இந்த விருதை 6 முறை பெற்று அதிக முறை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் பெடரர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது