முன்னாள் இந்தியபிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் அளித்து மதுரை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு 3 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காகவும், தனது தாயாரை பார்வையிடுவதற்காகவும் ஒரு மாதம் பரோல் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்ததும், ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் காலம் பரோல் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.