அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் முக்கிய உதவியாளரான ஹோப் ஹிக்ஸ் பதவிவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையுடன் தொடர்பு கொள்வதற்கான பொறுப்புகளை தலைமையேற்று நடத்தி வந்த இவர் நேற்று தனது பதவிவிலகல் கடிதத்தினை வெள்ளை மாளிகையில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தினங்களில் மேலும் சில முக்கிய அதிகாரிகள் பணிவிலக வாய்ப்புள்ளதாகவும் இவர் அறிவித்துள்ளார்.
தேர்தல் சமயத்தில் டிரம்பிற்காக இவர் கடுமையாக உழைத்த இவர் பல முக்கியமான திட்டங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பணிவிலகல் குறித்து கவலை வெளியிட்டுள்ள ட்ரம்ப் வெள்ளை மாளிகை முக்கியமான அதிகாரி ஒருவரை இழந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஹாப் ஹிக்ஸ் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது ரஷ்ய தலையீடு குறித்து வெள்ளை மாளிகை சிறப்பு விசாரணை அமைப்பால் விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையின் போது ஹோப் ஹிக்ஸ் தான் சில விஷயங்களில் பொய் சொன்னதை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.