Home இந்தியா தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சொத்து பறிமுதல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சொத்து பறிமுதல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

by admin

வங்கி மோசடி, வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருத்தல் போன்ற பொருளாதார குற்றங்கள் செய்து வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதாவுக்கு, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சொத்து பறிமுதல் மசோதா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 கோடி ரூபாக்கு அதிகமாக வங்கி மோசடி, கடன் மோசடி செய்து தப்பித்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவற்றை ஏலமிட்டு கடனை செலுத்த முடியும்.

இந்த மசோதா எதிர்வரும் வரும் 5-ம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்றத் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என இந்திய மத்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். பொருளாதார குற்றம் செய்து தப்பித்தவர்கள், நீதிமன்ற கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள், விசாரணையை எதிர்கொள்ள பயந்து வெளிநாடுகளில் இருப்பவர்கள், கிரிமினல் விசாரணைய எதிர்கொள்ள முடியாதவர்கள் ஆகியோருக்கு எதிராக இந்த சட்டம் பாயும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் ஏற்கனவே குற்றம் புரிந்தவர்கள் மீதும், வழக்கு நடந்துபவர்கள் மீதும் பாயும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More