218
யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்று மதில் சேதங்களுக்குள்ளானது. யாழ் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம் பகுதியை நோக்கிச் சென்ற வாகனம் அங்குள்ள வீதிச் சமிக்ஞையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்று மதிலுடன் காணப்பட்ட புத்தர் சிலையை அழகுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் தகர்த்தெறியப்பட்டதுடன் மதிலில் செதுக்கப்பட்டிருந்த யானைகள் சிலவும் பெரும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.சம்பவ ம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்
Spread the love