குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் ஓரு இனவாதி என அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.அமெரிக்காவைச் சேர்ந்த பத்து பேரில் ஆறு பேர், ட்ராம்ப் ஓர் இனவாதி என கருத்துரைத்துள்ளனர். அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவி;ல் வாழ்ந்து வரும் அரைவாசிக்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்கள், ஹிஸ்பானியர்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு ட்ராம்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர்.
ட்ராம்பின் கொள்கைகள் முஸ்லிம்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளதாக்க குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைகளை 57 வீதமானவர்கள் எதிர்ப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 85 வீதமானவர்கள் ட்ராம்ப் ஒர் இனவாதி என்றே கருதுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது