தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் காவல்துறையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மோதலில் ஹரி பூஷன் என்ற சிரேஸ்ட மாவோயிஸ்ட் தலைவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த என்கவுண்ட்டர் புஜாரி கேங்கர் என்னும் காட்டுப்ப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் நடைபெற்றுள்ளது.
கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களின் உடல்கள் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோதகுடம் மாவட்டத்தின் பத்ராசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் பாதுகாப்புப் படையினைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டள்ளதாகவும் அப்பகுதியிலிருந்து அதிகளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது