குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் ஒன்றை எடுக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சி நியாயமானதும், பொறுப்புணர்ச்சியுடன் கூடியதுமான தீர்மானம் ஒன்றை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினருமான பாலித ரங்கே பண்டார ரணிலுக்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.