அசர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் அதிமானோர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இன்று காலை இந்த தீவிபத்து ஏற்’பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து குறித்த பகுதிக்கு சென்ற தீயணைப்பு படையினரும் மீட்புப் படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 30-க்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வாசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது