குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 7ம் திகதி நுகோகொடவில் கூட்டமொன்றை நடத்த உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக இந்தக் கூட்டத்தில் இணைந்து கொண்டு, கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்பொழுது அவர்கள் இணைந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேடையில் ஏறினால் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு கூக்குரல் எழுப்புவார்கள் என்ற அச்சம் காரணமாக குறித்த ஆறு பாராளுளுமன்ற உறுப்பினர்களும் திட்டத்தை கைவிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் மார்ச் மாத இறுதியில் நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.