172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல டென்னிஸ் வீரர் ரபால் நடால் ஏ.ரீ.பீ. மாஸ்டர்ஸ் போட்டித் தொடரிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதையினால் நடால் பாதிக்கப்பட்டுள்ளதனை அடுத்து அவர் ஏ.ரீ.பீ. மாஸ்டர்ஸ் போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
31 வயதான ஸ்பெய்ன் நாட்டு நட்சத்திர வீரர் நடால், இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் மற்றும் மியாமி ஓபன் போட்டித் தொடர்களிலும் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரின் போதும் இடைநடுவில், நடால் விலகிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love