162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 6ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள நிதஹாஸ் சுதந்திர கிண்ண முக்கோண போட்டித் தொடரில் பங்களாதேஸ் கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் சகிபுல் ஹசன் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரலில் ஏற்பட்ட உபாதையிலிருந்து சகிபுல் முழுமையாக மீளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் பங்களாதேஸில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் வைத்து சகிபுல் உபாதைக்கு உள்ளாகியிருந்தார். இந்த தொடரின் போது பங்களாதேஸ் அணியை முகமதுல்லா வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love