உலகிலேயே அதிதொழில்நுட்ப வானிலை ஆய்வு செயற்கைக் கோளை நாசா விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது. இதன் மூலம் மேற்கு அமெரிக்காவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பெரும்புயல்கள் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை துல்லியமாகக் கணிக்க முடியும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கப் கனவரால் விமானப்படை ஏவுதளத்திலிருந்து அட்லாஸ் வி ரொக்கெட் மூலம் கோஸ்-எஸ் என்ற இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு விண்வெளி சுழற்வட்டப்பாதைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
11 பில்லியன் டொலர்கள் பெறுமதியுடைய இந்த உயர் தொழில்நுட்ப விண்கலம் நாசாவின் 2வது முயற்சியாகும். இதன் மூலம் கடும் சூறாவளிகள், காட்டுத்தீ, காட்டு வெள்ளம், பயங்கர நிலச்சரிவு மற்றும் பிற இயற்கைப் பேரழிவுகள் பற்றிய முன் தகவல்களை வழங்குவதுடன் மிகவும் துல்லியமான படங்களையும் அனுப்பி பேரழிவிலிருந்து காக்கும் செயலை மேற்கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொடரில் கோஸ்-16 என்ற முதலாவது செயற்கைக் கோள் அட்லாண்டிக் மற்றும் கிழக்குக் கடற்கரையை கண் காணித்து வருகிறது.