ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் காப்பாளரான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். 11-வது ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகளின் வீரர்களை தெரிவு இடம்பெற்றிருந்தது. அந்தவகையில் தினேஷ் கார்த்தில் கொல்கத்தா அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திரகிண்ண முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரில் விக்கெட் காப்பாளராக விளையாட உள்ளார். கடந்த ஐ.பி.எல் தொடர்களில் தினேஷ் கார்த்திக் பெங்களூர், டெல்லி, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளில் விளையாடியுள்ளார். ஏற்கனவே, இந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணித் தலைவராக தமிழகத்தின் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.