Home இந்தியாகார்த்தி சிதம்பரம் மும்பை அழைத்துச் செல்லப்பட்டார்..

கார்த்தி சிதம்பரம் மும்பை அழைத்துச் செல்லப்பட்டார்..

by admin

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி தற்போது காவலில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்தை மும்பை அழைத்துச் சென்று சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடுதல் ஆதாரங்களை திரட்டும் நோக்கில் இவ்வாறு மும்பை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பில் கடந்த மாதம் 28-ம் திகதி nசென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டெல்லிக்கு அழைத்துச் சென்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

அவரை ஒரு நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் மீண்டும் அவரை 6 நாட்கள் விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனை அடுத்து, கார்த்தி சிதம்பரத்திடம் ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த இந்திராணி முகர்ஜி அளித்திருந்த வாக்குமூலத்தை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் செவ்வ்hயக்கிழமையுடன் விசாரணைக்காவல் முடிவடைய உள்ள நிலையில், கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் மும்பை அழைத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More