166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு குறித்த அறிக்கை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில் பிரதமர் ரணில், விசேட குழுவொன்றை நியமித்திருந்தார். அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், ஹரீன் பெர்னாண்டோ மற்றும் ராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்திருந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள நிலையில், இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Spread the love