காஷ்மீரின் சில பகுதிகளில் மக்கள் இன்று போராட்டம் நடத்தி வரும் நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காஷ்மீரில் மூன்று தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும், சோபியன் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஒரு போராளி சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, இன்று வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
எனினும் ராணுவத்தின் நடமாடும் வாகனச் சோதனை சாவடி வாகனத்தை தீ வைத்துக் கொளுத்தியபின் பின்னர்தான் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதென ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்திலிருந்து 250 மீட்டர் தொலைவில், பொதுமக்களில் இறந்த மற்றொருவரின் உடல், இன்று காலை கண்டெ:க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இன்று இடம்பெறவிருந்த சிவில் சேரவகளுக்கான தேர்வுகள் ரத்து செய்வதாக காஷ்மீர் மாநில அரசு தேர்வாணையக்குழு அறிவித்துள்ளதுடன் தெற்கு காஷ்மீரில் இணைய மற்றும் புகையிரத சேவைகளும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஸ்ரீநகரில் கடைகள், பிற தொழில் பணியிடங்கள், பொது போக்குவரத்து ஆகியவைகளும் இன்று மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.