Home இலங்கை தெல்தெனிய பிரதேசத்தில் பதற்ற நிலைமை

தெல்தெனிய பிரதேசத்தில் பதற்ற நிலைமை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தெல்தெனிய பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 41 வயதான நபர் ஒருவர் தாக்கப்பட்ட கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த நபர்கள் குறித்த நபரை தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இரண்டு வாகனங்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமையே இந்த மோதலுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவத்தை எதிர்த்து தெல்தெனிய உடிஸ்பத்துவ மற்றும் மெதமஹானுவர ஆகிய பிரதேசங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.  இந்த சம்பவம் தொடர்பில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More