178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினால் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவிருந்தது. இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அறிவித்திருந்தனர்.
எனினும் நாட்டில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் காரணமாக நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை தற்போதைக்கு சமர்ப்பிப்பதில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்
Spread the love