இலங்கை பிரதான செய்திகள்

கண்டியில் இடம்பெற்ற சம்பவம் ஒர் திட்டமிட்ட நாச வேலையா? – ஜே.வி.பி.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கண்டியில் இடம்பெற்ற சம்பவம் ஓர் திட்டமிட்ட நாச வேலையா என ஜே.வி.பி சந்தேகம் வெளியிட்டுள்ளது. பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியைக் கவனித்தால் இவ்வாறான ஓர் சந்தேகம் எழுவதாகத் தெரிவித்துள்ளார்.

திகனவில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து, இரு தரப்பிற்கு இடையில் மோதல் உக்கிரமடைந்திருந்தது. அரசாங்கத்திற்கு தெரிந்தே அண்மையில் சில இன முரண்பாடுகள் இடம்பெற்றிருக்கலாம் என அனுரகுமார திஸாநாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். நாட்டின் சாதாரண சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் எனவும், அவசரகால சட்டங்கள் அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link