குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சிரியாவில் மீளவும் நச்சு வாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிரியாவின் கிழக்கு குவாத்தாவில் அரச படையினரின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் எனவே, அரச படையினர் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக குளோரின் வாயுவைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நச்சு வாயுத் தாக்குதலாக இருக்கக் கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை, இவ்வாறு நச்சு வாயுத் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.