156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்கள் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எந்தவொரு மதத் தலைவருக்கும் இந்த சம்பவங்களில் ஆபத்து ஏற்படவில்லை எனவும் போலிப் பிரச்சாரங்களுக்கு மக்கள் ஏமாந்து விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
Spread the love