154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிக்கு பயணம் செய்துள்ளார். கண்டியில் நிலவி வரும் நிலைமைகளை நேரில் கண்டறியும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு பயணம் செய்துள்ளார். துரித கதியில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அவர் இவ்வாறு கண்டிக்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு பிரிவு பொறுப்பாளர்கள், மதத் தலைவர்கள், பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நிலவும் பதற்ற நிலையை தணிப்பது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Spread the love