குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் புறச் சக்திகள் இயங்கியிருப்பதாக தேசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இது தொடர்பில் தனித் தனியாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் சிங்கள சமூகங்களுக்கு இடையிலான முரண்பாட்டை, பிரதேசத்தைச் சாரா புறச் சக்திகளே உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வெளியில் இருந்து வந்த நபர்களே இவ்வாறு குழப்பங்களை விளைவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலகங்களுடன் நேரடியாக தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதி, பிரதமரிடம் கோரியுள்ளது.