Home இலங்கை பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கைக்கு UN எச்சரிக்கை – தமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்…

பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கைக்கு UN எச்சரிக்கை – தமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்…

by admin

தமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்…


பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

காலமாறு நீதிப் பொறிமுறைமை மற்றும் பொறுப்பு கூறுதல்கள் தொடர்பில் இலங்கையில் முன்னேற்றம் எதுவும் பதிவாகா நிலையில், சர்வதேச நீதிப் பொறிமுறைமையின் மூலம் நியாயத்தை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37ம் அமர்வுகளின் வாய்மொழிமூல அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ள அவர் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்க அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ள அவர், இன, மத சிறுபான்மையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாகவும், காலமாறு நீதிப் பொறிமுறைமை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் காலம் தாழ்த்தக் கூடாது எனவும்  வலியுறுத்தி உள்ளார்.

இலங்கையில் அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் ஏற்படாமை வருத்தமளிப்பதாக  தெரிவித்துள்ள ஹூசெய்ன், பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் காலமாறு நீதிப் பொறிமுறைமை அமுல்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலைமை நீடிப்பது, உறுப்பு நாடுகளை சர்வதேச நிதி விசாரணைப் பொறிமுறைமை ஒன்றின் ஊடாக தீர்வு வழங்கப்படக்கூடிய வழிமுறைகள் குறித்து ஆராயுமாறு ஊக்கப்படுத்த நேரிடும் எனவும்,   இந்த விடயம் குறித்து எதிர்வரும் 21ம் திகதி முழு அளவில் விளக்கம் அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்…

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran March 8, 2018 - 4:00 pm

ஸ்ரீ லங்கா ஒரு:

1.கள்ள அரசு (Rogue state)
Sri Lankan government has been breaking international law & posing a threat to the security of people speaking Tamil as their mother tongue.

2.தோல்வியுற்ற அரசு (Failed state)
Sri Lanka’s political or economic system has become so weak that the government is no longer in full control.

3.அடக்கி ஆளும் அரசு (Oppressive state)
Sri Lankan government has been exercising power in a burdensome and cruel manner.

4.இனவாத அரசு (Racist state)
Sri Lanka has been believing in the superiority of Sinhala race over others.

5. Sri Lankan state will never implement the UNHRC resolutions fully.

6. Atrocity crimes will continue until the Tamils become strong.

7. We must achieve global influence & solve our problems.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More