குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன வன்முறைகளினால் அரசாங்கத்திற்கு நன்மையே பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிரதமரை பணி நீக்குவது குறித்தான அழுத்தங்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் உள்முரண்பாடுகள் என்பன நீங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இன முரண்பாடுகளினால் அரசாங்கத்தின் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த இன முரண்பாடுகளினால் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆழுத்தங்கள் ஏற்படப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு பெரும்பான்மையான சிங்களவர்கள் வாக்களித்தனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த நாகரீகமற்ற நடவடிக்கையினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மை கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.