135
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனப் பிரஜைகளின் பாதுகாப்பினை இலங்கை உறுதிப்படுத்தும் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலை குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களும், இலங்கை அரசாங்கமும் இவ்வாறான பிரச்சினைகளை கையாள்வதற்கான திறன்களைக் கொண்டிருப்பதாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
Spread the love