160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிநாட்டுப் பிரஜைகள் கடவுச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுது;திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் இன்றைய தினமும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இது பற்றி அறிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பிரஜைகள் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, ஊரடங்கு அமுலில் இருந்தாலும் பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கண்டியில் அசாதாரண சூழ்நிலை தணிந்துள்ளதாகவும் சுற்றுலாப் பயணிகள் வழமை போன்று கண்டிக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love