குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடக வலையமைப்பு குறித்த தடைகளை ஜனாதிபதியும், பிரதமரும், டிஜிட்டல் கட்டுமான அமைச்சரும் மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்த சட்டங்களை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் பதற்ற நிலைமை காரணமாக இலங்கையில் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு தற்காலிக அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர் ஆகியோர் இந்த தடையை மீறி தங்களது சமூக ஊடகக் கணக்குகளின் ஊடாக பதிவுகளை இட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.