Home இலங்கைசூழ்ச்சிகாரர்கள் அரசாங்கத்திலேயே உள்ளனர் – ஜே.என்.பி.

சூழ்ச்சிகாரர்கள் அரசாங்கத்திலேயே உள்ளனர் – ஜே.என்.பி.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சூழ்ச்சிக்காரர்கள் அரசாங்கத்திலேயே உள்ளதாக ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் ஆதரவுடனான கும்பல்களே வன்முறைகளில் ஈடுபட்டதாக ஜே.என்.பி கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற தன்மையை திசை திருப்பும் நோக்கில் இவ்வாறு கலகங்கள் விளைவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறைகள் தொடர்பில் விசேட பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட்டால் அது குறித்து அம்பலப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளின் தேவைக்கு ஏற்ப அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க போதுமான சட்டங்கள் இருந்த போதிலும், புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு அமைய புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More