141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முஸ்லிம் நாடுகளின் ராஜதந்திரிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த ராஜதந்திரிகளுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அவர் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், திட்டவட்டமாக என்ன விடயத்திற்காக இந்த சந்திப்பு நடத்தப்பட்டது என்பது பற்றிய சரியான விபரங்கள் தெரியவரவில்லை. முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love