173
சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முகநூல், வட்ஸ்அப் மற்றும் வைபர் போன்ற சமூக ஊடக வலையமைப்பு சேவைகள் முடக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் இன முரண்பாடுகளைத் தொடர்ந்து சமூக ஊடக வலையமைப்பு பயன்பாடு தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர், மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்ன ஆகியோருக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Spread the love