164
தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக வலையமைப்புக்கள் இன்று வழமை போல் இயங்கும் :
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடக வலையமைப்புக்கள் இன்றைய தினம் வழமை போன்று இயங்கும் என பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக சமூக ஊடக வலையமைப்புக்கள் முடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
போலியான தகவல்களை பரப்புவதற்கு சமூக ஊடக வலையமைப்புக்கள் மிகவும் சிறந்த ஓர் கருவியாக அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். போலிப் பிரச்சாரங்கள் பரவுவதனை தடுக்கும் நோக்கில் சமூக ஊடக வலையமைப்புக்கள் முடக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Spread the love