இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான 14 ஒப்பந்தங்கள் அந்நாட்டு தலைவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையிலேயே இந்த 14 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளுடன் நான்கு நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா சென்றுள்ளனர். அவர்களை டெல்லி விமான நிலையத்தில் இந்தியப் பிரதமர் மோடி வரவேற்றார்.
இதேவேளை இன்று ஜனாதிபதி மாளிகையில் இம்மானுவேல் மெக்ரானிற்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு, அணு எரிசக்தி, இருநாடுகளுக்கு இடையிலான ரகசிய தகவல் பரிமாற்ற தடுப்பு உட்பட 14 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவில் 20 கோடி யூரோக்கள் அளவிலான தொழில் முதலீடுகளை செய்ய பிரான்ஸ் முன்வந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதிஅலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றடைந்துள்ளார். புதுடெல்லி விமான நிலையத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு சென்றடைந்த அவரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகச் சென்று வரவேற்றார்.
மக்ரோனுடன் அவரது மனைவி ப்ரிஜித் மற்றும் அந்நாட்டின் மூத்த அமைச்சர்கள் உடன் வந்திருந்தனர். இதையடுத்து, இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் இம்மானுவேல் மக்னிரோனிற்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பேசிய மக்ரோன், இந்தியாவிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது எனவும் இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு துறை ஒத்துழைப்பில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் எனவும் இருநாடுகளுக்கிடையே வரலாற்று சிறப்புமிக்க உறவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளாhர்.
அதன்பின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற மரியாதை செலுத்தி இமானுவல் மக்ரோன பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவாராஜை சந்தித்துள்ளார்.