அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் சந்திப்பு வரவேற்கத்தக்கது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் ( Antonio Guterres ) தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகொரிய ஜனாதிபதியை அமெரிக்க ஜனாதிபதி சந்திக்க உள்ளார் எனவும், இவர்களது சந்திப்பு எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இந்த சந்திப்பு வரவேற்கத்தக்கது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் (Antonio Guterres) தெரிவித்துள்ளார்.
மேலும் . இந்த சந்திப்பின் மூலம் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் தணிந்து அமைதி நிலை திரும்பும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டூஜாரிக் தெரிவித்துள்ளார்.