பாகிஸ்தானில் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தவும் அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.
கடந்த 2007-ல் பாகிஸ்தானில முஷாரப் அவசரநிலை பிரகடனம் செய்த போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதுடன் 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவசரநிலை பிரகடனம் செய்ததற்காக முஷாரப் மீது பின்னர் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் முஷாரப்புக்கு சொந்தமான சொத்து விவரங்களை உள்துறை அமைச்சகம் வழங்கியிருந்தது.
இந்தநிலையில் அரச வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் முஷாரப்பை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தவும் அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.
தற்போது டுபாயில் உள்ள முஷாரப்பை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரக அரசுடன் சட்ட உதவி ஒப்பந்தம் செய்துகொள்ளவும் அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது
1 comment
At last this is the state of affairs for our political folks as well.