Home இந்தியாதென் மேற்கு கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் ராமேசுவரத்தில் படகுகள் காத்திருப்பு…

தென் மேற்கு கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் ராமேசுவரத்தில் படகுகள் காத்திருப்பு…

by admin

வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய புயல் காரணமாக தமிழகத்தின் தென் மேற்கு கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

புயல் காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்வதற்கான மீன்பிடி டோக்கன் வழங்கப்படவில்லை.

அதைத்தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன. எச்சரிக்கையை மீறி மீனவர்கள் கடலுக்கு செல்வதை தடுக்க கடலோர காவல் படையினர் ரோந்து மேற்கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More