குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குளோபல் தமிழ் போரம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும்போக்குவாதம் வலுப்பெற்று வரும் அதேவேளை, மத்தியஸ்த கொள்கைகள் பலவீனமடைந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
அளித்த வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாமையே, அண்மையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை எதிர்நோக்கக் காரணம் என தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் உரிய முனைப்பு காட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்துவதிலும் அரசாங்கம் காலம் தாழ்த்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். சில வரலாற்றுத் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு பொன்னான ஒர் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.