உலக அளவில் மனித இனத்தை அச்சுறுத்துக்கூடிய உயிர்கொல்லி நோயாக டிசீஸ் எக்ஸ் என்ற பெயர் தெரியாத ஒரு நோய் பரவலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது
இதுவரை அந்த நோயின் தீவிரத்தையும், எதிர்ப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்காத நிலையில், இதற்கு டிசீஸ் எக்ஸ் என நோர்வே நாட்டின் அறிவியல் அறிஞர்கள் பெயரிட்டுள்ளனர். எதிர்காலத்தில் மனித இனத்தை அச்சுறுத்தும் நோயாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உலக சுகாதார அமைப்பு மனித சமூகத்தை அச்சுறுத்தும் நோய்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் பட்டியலிடப்பட்ட அச்சுறுத்தும் நோய்களில் எபோலா, லாசா பீவர், சிசிஎச்எப் ஹீமோராஜிக் பீவர், நிபா, மெஸ் , சார்ஸ் என்பவற்றுடன் இந்த டிசீஸ் எக்ஸ் என்ற புதிய நோயையும் அறிவித்துள்ளனர்.
இந்த டிசீஸ் எக்ஸ் நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், இந்த நோய் சர்வதேச அளவில் மிகப்பெரிய கொள்ளை நோயாக உருவெடுக்கும் எனத் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த மனித இனத்துக்கு எந்தவிதமான பாதிப்பை உண்டு செய்யும் என்பது தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.