122
யாழ்.மாநகரசபை ஊழியர் ஒருவர் வீதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த அன்ரனிராசு என்பவர் யாழ்ப்பாணம் மாநகரசபையில் சுகாதாரபிரிவில் ஊழியராக உள்ளார்.
குறித்த நபர் நேற்று சனிக்கிழமை காலை சின்னக்கடை பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Spread the love