தேனி அருகே காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மாணவி ஒருவர் பலியாகி இருக்கிறார். தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது. இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட கோவை, ஈரோடு மாணவிகள் சென்றுள்ளனர். மொத்தம் 53 மாணவிகளும் 3 மாணவர்களும் சென்றதாக கூறப்படுகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி மாணவி ஒருவர் பலியாகியுள்ளார். 10 பேர் வரை உயிரோடு மீட்கப்பட்டு இருக்கிறார்கள். காட்டுத் தீயில் சிக்கிய ஏனைய மாணவ மாணவிகளை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது. தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் தமிழக முதல்வரின் வேண்டுகோளிற்கு இணங்க விமானப்படையினர் இந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளதொடு மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ மாணவ மாணவிகள் சிக்கித் தவிப்பு…
158
Spread the love