178
லா லிகா கால்பந்து லீக் போட்டியில் ரியல் மட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியொன்றில் ரியல் மட்ரிட் அணியும் எஸ்டி எய்பர் அணியும் போட்டியிட்ட நிலையில் ரியல் மட்ரிட் 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் பார்சிலோனா அணியும் மலாகா அணியும் போட்டியிட்ட நிலையில் 2-0 என பார்சிலோனா வெற்றி பெற்றது. இந்தநிலையில் லா லிகா தர வரிசையில் பார்சிலோனா 72 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் அட்லெடிகோ மட்ரிட் 61 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரியல் மட்ரிட் 57 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love