169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடகங்கள் மீதான தடையானது பொருளாதாரத்தை பாதிக்கும் என பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளரும் இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அணைக்குழுவின் தலைவருமான ஒஸ்டின் பெர்னாண்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது இந்த விடயங்களை சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார பாதிப்புக்கள் குறித்து தாம் ஜனாதிபதியிடமும் விளக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love