229
யோகாக் கலை உடலை கட்டுக்கோப்பாகவும் நலமாகவும் வைத்திருக்க உதவுகின்றது. அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் தமது உடலை கட்டுக்கோப்பதாகவும் நலமாகவும் வைத்திருக்க யோகா கலையில் ஈடுபடுகின்றனர். முன்னணி நடிகை அனுஷ்கா யோகா ஆசிரியையாக இருந்து நடிகையானவர். இவர் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு செல்லும்போது, யோகா பயிற்சி பற்றிய ஆலோசனைகளை நடிகர், நடிகைகளுக்கு வழங்கி வருகிறார்.

இவரை தொடர்ந்து பல நடிகைககள் யோகா பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவ்வாறே தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, படப்பிடிப்பில் எவ்வளவு வேலைப்பளுவாக இருந்தாலும் தவறாமல் யோகா செய்து வருவதாக கூறுகின்றார்.
தமன்னா ஐதராபாத்தில் உள்ள பாரத் தாகூர் யோகா பள்ளியில், யோகா மாஸ்டர் ருஹீ என்பவரிடம் தீவிர யோகா பயிற்சி பெற்று வருகின்றார். உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் உற்சாகமாக இருப்பது எப்படி என்பதை யோகா கலை கற்றுத் தருவதாக நடிகை தமன்னா குறிப்பிடுகிறார்.
‘பாகுபலி’ படத்தில் நடித்தபோது யோகா கற்கும் ஆர்வம் ஏற்பட்டதாகவும் கூறிய அவர் உண்மையாகவே யோகா பயிற்சி பெற்ற பிறகுஒரு அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் தெரிவித்தார். இதேவேளை எத்தகைய வேலைப் பளு இருந்தாலும் யோகாவில் ஈடுபடத் தவறுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ம் தறாமல் யோகா செய்து வருகிறேன்”.
Spread the love