குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண கல்வி அமைச்சின் மீதான குற்றசாட்டுகள் உடன் இன்றைய வடமாகாண சபை அமர்வு நிறைவுக்கு வந்தது. வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போது வடமாகாண கல்வி அமைச்சு வினைத்திறனாக செயற்படவில்லை , ஆசிரியர்கள் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய வில்லை , கல்வி திணைக்களங்கள் , வலயங்களில் அதிகாரிகள் அசமந்தமாக செயற்படுகின்றார்கள் என பல்வேறு குற்ற சாட்டுக்களை மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசாரமாக சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் முன் வைத்து கருத்து தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து காலை 9.30 மணியளவில் ஆரம்பமான சபை அமர்வுகள் கல்வி அமைச்சின் மீதான குற்ற சாட்டுக்களுடன் மதியம் 12 மணியுடன் எதிர்வரும் 27ஆம் திகதி சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. குறித்த சபை அமர்வில் கல்வி அமைச்சின் மீதான குற்ற சாட்டுக்களை தவிர வேறு பிரதனா விடயங்கள் எதனையும் பிரஸ்தாபிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது