215
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் 2015இல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும் 25 செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்கள் பதவி காலம் இன்னும் சில மாதங்களில் முடிய உள்ள நிலையில் தேர்தல் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விஷால் மீண்டும் பொதுச் செயலாளர் பதவிக்காக போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இதேவேளை விஷாலின் அணியை எதிர்த்து ராதாரவி தலைமையிலான அணி போட்டியிடத் தயாராகிறது. நடிகர்கள், நாடக நடிகர்கள் என்று சுமார் 3,500 வாக்காளர்களின் ஆதரவு திரட்டும் பணியை இரண்டு அணியினரும் தற்போதே ஆரம்பித்துள்ளனர்.
நடிகர் சங்க கட்டிட நிர்ப்மாணப் பணிகள் நிறைவடையாமை காரணமாகவே தேர்தல் பிற்போடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் கட்டட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திலேயே முழுமையாக நிறைவடையும் என்றும் தெரிகிறது.
Spread the love