187
இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் , வீனஸ் வில்லியம்ஸிடம் தோல்வியடைந்துள்ளார். அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் இந்த சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் அமெரிக்காவின் புகழ்பெற்ற சகோதரிகளான செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் போட்டியிட்டிருந்தனர்;. இதில் செரீனா 3-6, 4-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
சகோதரிகள் இருவரும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் போட்டியிட்டதில் வீனஸ் 13 முறையும், செரீனா 17 முறையும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love