குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தீங்கு ஏற்படுத்தக கூடியவற்றை கட்டுப்படுத்துவதில் தவறில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான தடை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜப்பானுக்கு பயணம்; செய்துள்ள ஜனாதிபதி, ஜப்பான் வாழ் இலங்கையர்களுடன் சந்திப்பினை நடத்தியிருந்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு புறத்தில் நன்மை என்றாலும் மறுபுறத்தில் தீமைகள் ஏற்படுமாயின் அது குறித்து கவனம் செலுத்தி அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கையடக்கத்தொலைபேசி, கணனி, சமூக ஊடகங்கள், இணையம் போன்றன மனிதனுக்கு பல்வேறு வழிகளில் நன்மை அளித்தாலும், இலங்கை வாழ் மக்களில் பலர் அதில் பாதக விடயங்களையே பெற்றுக்கொள்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.