முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரில் இன்று இந்தியா – பங்களாதேஸ் அணிகள் போட்டியிடவுள்ளன. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இரு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. முதல் போட்டியில் இலங்கை அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் பங்களாதேஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
அத்துடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்கள் வித்தியாத்தில் இந்திய அணி வென்றிருந்தது. அதேவேளை பங்களாதேஸ் அணி முதல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த நிலையில் அடுத்த ஆட்டத்தில் இலங்கை அணியை வென்றிருந்தது.
இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இறுதிப்போட்டிக்கு தெரிவாதற்கு இற்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்ற அதேவேளை இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது